பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பாட்டுக்கும் கட்டாயத்துக்கும் உட்பட்டுப் பாடியதால் தரமில்லாத படைப்புகள் தோன்றின. கவிதை சொற் சிலம்பமாகியது. பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று பண்டை இலக்கியப் பாத்திரங்கள் பற்றித் திருப்பித் திருப்பிக் கீறல் விழுந்த இசைத் தட்டாய்ப்பாடி இன்றைய சமுதாயப் பிரக்ஞையே பல கவிஞர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. O கவிதையின் கருப்பொருள் உயர் வானதாக இருக்க வேண்டும். கவிதையின் கருப்பொருள் மட்டமானதாக இருந்தாலும் அதன் பயனும் அது வெளிப்படுத்தும் உணர்வுகளும் மக்களினத்தை உயர்த்துவனவாக இருக்க வேண்டும். கவிஞனாக இருப்பதில் எனக்கும் பெருமிதம் உண்டு. பெருமைக்குரிய கவிதையை வின்ளையாட்டுத் தனமாகப் பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன். கருத்தாழமும் உணர்ச்சிப் பெருக்கும் கவிதையின் இருகண்கள். O அந்த வெள்ளையன்என் தந்தையைக் கொன்றான்; என் தந்தை பெருமிதம் மிக்கவர்! அந்த வெள்ளையன் கவிஞர் முருகுசுந்தரம்