பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணா: நீதி நூல் - நம்மைக் கோழைப்படுத்தும் மெதுவான நஞ்சு! அறத்தைப் பேசிப்பேசியே கெட்டுப் போனவர்கள் தமிழர்கள் மேகலை: மருந்துக் கடைக்காரர் எல்லாருமே ஆண்கள், இது ஆண் ஆதிக்க உலகம், மருந்துவிலை எப்படி இறங்கும்? நம்பி: - இது பொருந்தாக் கூற்று, பெண்கள். மருந்துவனிகர்களாக இருந்தால் மருந்துவிலை குறைந்துவிடுமா? மேகலை: நிச்சயமாக! பெண்கள் - இயல்பாகவே இரக்க குணம் கொண்டவர்கள். பதுக்கி வைக்கவும் கள்ளவாணிபம் செய்யவும் பெண்களுக்குத் தெரியாது. வீணா: கள்ள வாணிபம் செய்பவர்களை நேரு 'தூக்கில் போடுவேன்' என்றார். அதைச் - செயல் படுத்தவேண்டும், கவிஞர் முருகுசுந்தரம் 96