பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வகைப் பேரின்பம் இருக்கிறது. மேகலை: பெண்கள் போராட்டத்துக்கு உன்னைப் போல் வீராங்கனை ஒரு நூறுபேர் கிடைத்தால் போதும் பெண்மை வெல்லும், நம்பி: உயிர்களை இவ்வளவு மலிவாக நினைக்க மருத்துவனாகிய என்னால் முடியாது. என் தராசில் சாக்கடைத் தொழிலாளியின் உயிரும் ஜனாதிபதியின் உயிரும் ஒரே நிறை தான் (பணிப் பெண் எல்லாருக்கும் தேநீர் கொடுக்கிறாள். தேநீர் சாப்பிட்டதும் எல்லாரும் பிரிந்து செல்கின்றனர்.) காட்சி 5 இடம் : நூலகத்துக்கு எதிரில் உள்ள புல்வெளி நேரம் : Ꮏty fᎢ☾Ꮘh © உறுப்பினர்: சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை நால்வரும் புல்வெளியில் அமர்ந்திருக்கின்றனர். எதிரில் உள்ள கைவானொலி நேயர் விருப்பங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது; புல் வெளியின் நடுவில் இருந்து புறப்பட்டு மேலே எழும்பிப் பூவாகச் சிதறும் தண்ணிரின் வேடிக்கையை வீணாவும், தோகையும் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். சொற்கோ: மயிலைவிட கவிஞர் முருகுசுந்தரம் 1OO