பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி இருந்திருக்கும்? பேராசிரியர் மேகலை இப்போதே அழகி. அவர் - கல்லூரி மாணவியாக இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கல்லூரி ஜூலியட், என்று அவருக்குப் பெயர், ஆங்கிலப் பேராசிரியர் ஆனந்தனும் அவரும் காதலித்து அக்காதல் பிறையாக வளர்ந்து நிலவாக முதிர்ந்து நிச்சயதார்த்தம் வரையில் சென்று விட்டது. எல்லாரும்: அப்படியா? பிறகு ஏன் திருமணம் நடைபெறவில்லை? சொற்கோ: அதுவொரு சோகக்கதை! ஒரு நாள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் மேகலையின் கையில் இருந்த வெள்ளைப் புள்ளி யொன்று ஆனந்தனின் கண்ணில் பட்டது. அதைப் பார்த்த ஆனந்தன் மேகலையிடமிருந்து ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார். வீணா: முருகுசுந்தரம் கவிதைகள் 103