பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீனா: சரி1 பேராசிரியர் மேகலை பெண்ணுரிமைபற்றிப் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்கள் - ஆங்கிலப் பேராசிரியர் ஆனந்தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றீரா? சொற்கோ: ஐயையோ! அப்படி ஏதுமில்லை. வீணா: பிறகு மேகலைபற்றி இப்போது நீங்கள் விமர்சனம் செய்யக் காரணம் தோகை: சிலருக்கு இது பொழுது போக்கு அப்படித்தானே? (சொற்கோவின் முகத்தில் அசடு வழிகிறது) காட்சி 6 இடம் : பெங்களூர் வங்கி நேரம் : முற்பகல் 11 மணி உறுப்பினர்: நெடுமுடி, அம்ரிதா நெடுமுடி தில்லியிலிருந்து மாறுதல் பெற்று பெங்களுர் வந்து, மாநகரக் காவல்துறைத் துணை ஆணையராகப் பொறுப்பேற்கிறான். ஒரு நாள்காசோலை மாற்றுவதற்காக அரசு வங்கிக்குச் செல்லுகிறான். வங்கிக் காசாளராக அமர்ந்திருந்த பெண், அவனது காசோலையைக் கையில் வாங்கிக் கொண்டு அவனையே உற்றுப்பார்க்கிறாள், அப்பெண்ணின் முருகுசுந்தரம் கவிதைகள் 105