பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத்தைப் பார்த்ததும் அம்ரிதா, என்ற சொல் அவன் வாயிலிருந்து குதித்து வெளிவருகிறது. நெடுமுடி: அம்ரிதா அம்ரிதா: நீங்கள்... இங்கே...? நெடுமுடி: நிலவுபலகணிக்கு அருகிலேயே வந்து விட்டது, நான்இங்கு தான் பணிபுரிகிறேன், நீ எப்படி. அம்ரிதா: நிலவுதன் பயணத்தில் இளைப்பாறுவதற்காக நின்றது. அவ்வளவுதான். நெடுமுடி: என்ன புதிர்... அம்ரிதா: உஷ்ஷ்... எல்லோருடைய கண்வண்டுகளும் நம்மையே மொய்க்கின்றன. நெடுமுடி: இன்று மாலை ஐந்து மணிக்குக் கப்பன் பூங்காவில் சந்திக்கிறோம் ஆமாம்! (அம்ரிதா வியப்போடு அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்) கவிஞர் முருகுசுந்தரம் 1ᎺᏮ