பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 7 இடம் : கப்பன் பூங்கா நேரம் : Ꮏfy fT &ö Ꮚy உறுப்பினர்: அம்ரிதா, நெடுமுடி மாலை ஐந்து மணிக்கு நெடுமுடியும் அம்ரிதாவும் கப்பன் பூங்காவில் சந்திக்கின்றனர். அங்கிருந்த உணவுவிடுதியில் ஒரமாக இடம் பிடித்து, நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர். பரிமாறிய சிற்றுண்டியைக் கொறித்தவண்ணம் பேசத் தொடங்குகின்றனர். நெடுமுடி: மழை விட்டதும் நிமிர்ந்து பார்க்கிறேன். அழகிய வானவில். அதுவும் - கைக்கெட்டிய தூரத்தில். மகிழ்ச்சியால் உள்ளம் துள்ளுகிறது. இந்த வானவில் - பெங்களுருக்கு எப்படி வந்தது? அம்ரிதா: அதுவோர் சுவையான, கண்ணிர்க் கதை ஜலந்தர் சென்றவுடன் பயங்கர வாதிகளால் என் மாமா கொல்லப்பட்டார் என்று அறிந்து வருந்தினேன் மாமன் மனைவியோடு அவள் முருகுசுந்தரம் கவிதைகள் iO7