பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடி: அம்ரிதா...! அம்ரிதா: கவலைக்காற்று வேகமாக வீசும் போது பருவக் கொம்பில் பூத்த சலன மலர்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன மேலும்பருவச் சலனங்களால் பாதிக்கப்படாத அளவுக்கு என் உள்ளம் பக்குவப்பட்டிருக்கிறது. நெடுமுடி: அம்ரிதா... (மெதுவாக அவள் கையைப் பற்றுகிறான்) அம்ரிதா: காதலோடு தீண்டும் உங்கள் விரல்களின் ஸ்பரிசம் கூட என்னைப் பரவசப் படுத்தவில்லை. ஆனால் ஆறுதலாக இருக்கிறது. என்னைத் தாங்க இரு கைகளும் நான் தளிர்த்துப்படர இரண்டு தடந்தோள்களும் இருக்கின்றன என்ற நம்பிக்ைைகயால் நெடுமுடி: வேதனையில் உராய்ந்து உராய்ந்து உன் இதயக்கயிறு தேய்ந்து போயிருக்கிறது, கவிஞர் முருகுசுந்தரம் 110