பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குத் தெரியும், நெடுமுடி: என் மீது உனக்கு இன்னும் - நம்பிக்கை ஏற்படவில்லையா? அம்ரிதா: உங்களை நம்பாமலிருந்தால் தில்லியில் அன்று உங்களைச் சரணடைந்திருக்கமாட்டேன், உங்கள் ஆளுமையும் அருங்குணங்களும் அன்றே என்னை ஆட்கொண்டு விட்டன, நெடுமுடி: பின்னர் . ஏனிந்தக் குழப்பம்? அம்ரிதா: குமுதம் - நீரில் வாழ்ந்தாலும் தொலைவில் உள்ள நிலவின் கட்டளைப்படிதான் கூம்பி மலர்கிறது, திருமணம் - ஆண் பெண் சம்பந்தப்பட்டது என்றாலும் அவர்கள் வாழ்க்கையை இந்த நாட்டுச் சாதியும் மதமும் சம்பிர தாயங்களுமே ஆட்டிப் படைக்கின்றன முருகுசுந்தரம் கவிதைகள் 121