பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிபெருக்கி: இந்த ஓரங்க நாடகம் பழைய மதுச் சாறுதான் ஆனால் குவளை புதியது. மதுச்சாற்றின் குணம் கூட மாற்றப்பட்டுள்ளது. இந்நாடகம் தமிழ்ப் பேராசிரியர் மேகலையின் கைவண்ணம், இதிகாசத்தில் வெறும் - கூட்டுப் புழுவாக இருந்த சகுந்தலை இந்த நாடகத்தில் சிறகடித்துப் பறக்கும் வண்டாகிறாள்: கொட்டவும் செய்கிறாள். பெண்ணியம் - இந் நாடகத்தில் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் நம்பியும் வீணாவும் துஷ்யந்தன் சகுந்தலையாக இதில் நடிக்கின்றனர். அரும்பாக இருந்த சகுந்தலையின் உள்ளம் துஷ்யந்தனால் அவிழ்மலராகிறது. சிப்பிச் சகுந்தலை தன் முத்து வயிற்றுடன் கவிஞர் முருகுசுந்தரம் 126