பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலனைக் காண அஸ்தினாபுரம் வருகிறாள் அரியணைக் காதலன், சூழ் நிலையால் அறியாக் காதலன், ஆகிறான் பெளரவ மன்னனிடம் கெளரவம் இழந்த அப்புள்ளிமான் - சீறும் சிறுத்தையாக மாறுகிறது. சகுந்தலை: கைப்பிடித்த காதலரே! துஷ்யந்தன்: நான் பெளரவ குலத்து மன்னன், சகுந்தலை: புரிகிறது! பெளரவ குலத்துக் கெளரவம் என்னை - மனைவியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது, σή! இந் நாட்டுப் பெளரவரே! துஷ்யந்தன்: எனன? சகுந்தலை: தாள் வரையில் தொங்கிய என் கருவிழுதுக் கூந்தலைத் தன் கூட்டம் என்று கருதிய வண்டு என்னைத் துரத்தியது. அதற்குப் பயந்து அலறி ஒடிய என்னை முருகுசுந்தரம் கவிதைகள் 127