பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடி வந்து நீங்கள் காப்பாற்றியது நினைவில் இல்லையா? துஷ்யந்தன்: இல்லை. சகுந்தலை: লে কোঙ্ক புன்னையிலைக் காலில் தர்ப்பை குத்திப் புண் செய்த போது என் காலைத் தொட்டுத் தர்ப் பையைப் பிடுங்கினர், எனது மதுக்கண்களால் உங்கள் மார்பில் புதுப்புண்கள் செய்த தாகச் சொல்லிச் சிரித்தீர்! துஷ்யந்தன்: சே! சே! உன் காலை நான் தொடுவதாவது? சகுந்தலை: நெளிகின்ற புழுப்போல இலைப் படுக்கை நெருப்பில் நான் துடிக்கையில் நீங்கள் - கிளியுடம்புத் தாமரையின் இலையைக் கிள்ளி வந்து விசிறியது நினைவில்லையா! துஷ்யந்தன்: நிச்சயமாக இல்லை! கவிஞர் முருகுசுந்தரம் 128