பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை முருகு என்றால் அழகு. சுந்தரம் என்றாலும அழகு. முருகு சுந்தரம் கவிதைகளோ பேரழகு. பாவேந்தரின் சீடர்களில் ஒருவர். மரபுக்கும் புதுமைக்கும் பாலமானவர். விருத்தப் பாக்களோடு புதுக்கவிதைகளும் எழுதியவர். இது இந்தக் காலக்கட்டத்து கவிஞர்களில் தவிர்க்க முடியாத தலை எழுத்து. கவிதையில் கதை சொல்லும் கலை இவருக்குச் சிறப்பாகக் கைவந்திருக்கிறது 'வெள்ளை யானை' இதற்கு ஒரு நல்ல உதாரணம். அகலிகை தொன்மத்துக்கு அழகாக வர்ணம் தீட்டியுள்ளார். பெண்ணியத்துக்கான சிறந்த சான்று. எரிநட்சத்திரம் சமகாலக் கவிதை நாடகம். 'டெரரிஸ்ட் என்று ஒரு குறும்பம். 'கன்னத்தில் முத்தமிட்டால் 'ஒரு கலைப்படம்’ 'எரிநட்சத்திரம் அந்த வரிசையில் பயங்கர வாதத்தைச் சாடுகிறது. இவரது புதுக்கவிதைகளைப் போலவே மரபுக்கவிதைகளும் எளிமையாக உள்ளன. கடை திறப்பு, பனித் துளிகள், சந்தனப் பேழை, தீர்த்தக் கரையிலே போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல்வேறு விருதுகளோடு பாரதிதாசன் விருதும் பெற்றவர். இவரது கவிதைகளை ஒட்டுமொத்தமாக வெளியிடும் வாய்ப்பு "காவ்யாவிற்கு கிடைத்துள்ளது. இது அழகுக்கு அழகு சேர்க்கும் பணி. காவ்யா சண்முக சுந்தரம் கவிஞர் முருகுசுந்தரம்