பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்யந்தன்: சகுந்தலை...! சகுந்தலை: ஓ! பெளரவப் பேரரசரா? வரவேண்டும்! உங்கள் காலடிபட இந்த ஏழைக்குடில் என்ன புண்ணியம் செய்ததோ? துஷ்யந்தன்: சகுந்தலை என்னை மன்னிப்பாயா? சகுந்தலை: மன்னிக்கலாம்! என் வசந்தம் ஐந்தாண்டுகள் வறட்சியில் கழிந்தது. நான் - ஊமைக் குயிலாகவே குரலொடுங்கி வாழ்ந்தேன். பிறர் - ஏளனப் பனிப் பார்வை பட்டு என் பெண்மையின் இளைய தளிர்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. தன் தந்தையைப் பற்றிக் கேட்கும் இந்த இளங்குருத்தின் முகத்தை ᎧTöᎢ☾ᎢfᎢ© - துணிச்சலோடு எதிர் கொள்ள முடியவில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 435