பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநாடிகளை யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கும் நான் செய்த குற்றந்தான் என்ன? துஷ்யந்தன்: குற்றங்கள் என்னுடையவை! சகுந்தலை: உங்கள் - தேன் பூசிய சொற்களைக் கேட்டு ஒரு முறை நான் ஏமாந்தது போதும்! ஒர் ஆண் - இடறி விழுந்தால் அது விளையாட்டு, ஒரு பெண் இடறி விழுந்தால் அது விபத்து முதலில் ஏற்பட்ட விபத்திலிருந்து நான் இன்னும் மீள வில்லை. துஷ்யந்தன்: சகுந்தலை! நான் - உண்மையை உணர்ந்து கொண்டேன்! சகுந்தலை: மறதி - மன்னர் குடும்பத்துக்கு முருகுசுந்தரம் கவிதைகள் - 137