பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டாகப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இசையைச்சுவைத்த வண்ணம் நம்பி உள்ளே வருகிறான். நம்பி: - வயலின் இசையில் நான் மெய்மறக்கும் பாடல் இரண்டு ஒன்று இந்தப் பாடல் மற்றொன்று துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா கண்ணே! என்ற பாரதிதாசன் பாடல், அதைக் குன்னக்குடிவைத்தியநாதன் தேஷ் இராகத்தில் வயலினில் மீட்டும் போது கேட்பவர்கள் தாங்களே இசைக்கருவிகளாக மாறி அப்பாடலே தங்களை மீட்டுவது போன்ற உணர்ச்சியைப் பெறுவர் சுரங்கள் மத்தாப்பாக உதிரும். மேகலை: என்ன நம்பி, நுழையும் போதே கலைப் பெருக் கோடு கரைபுரண்டு வருகிறாய்? கவிஞர் முருகுசுந்தரம் 140