பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: இசைக்கு மயங்காதார் யார்? என்ன? ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மேகலை: எந்தப் புற்றில் - எந்தப் பாம்பு இருக்கிறதோ? யாரே அறிவார்? நம்பி: என்ன திடீரென்று புதிர் போடுகிறீர்கள்? மேகலை: வீணாவை ஒரு வாயாடியாகவும் குறும்புக்காரியாகவும் பிடிவாதக் காரியாகவும் வரலாற்று மாணவியாகவுந்தான் அறிவோம். நம்பி: ஆமாம்! மேகலை: ஆனால் அவள் உள்ளத்தில் நுட்பமான கவிதையாற்றல் கொந்தளித்துக் கொண்டிருப்பது இவ்வளவு நாட்களாக நமக்குத் தெரியாமல் போய்விட்டது, நம்பி; அப்படியா? மேகலை: இது அவள் எழுதிய கவிதை! முருகுசுந்தரம் கவிதைகள் 141