பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தலைப்பு 'விட்டில் உரக்கப்படி, நம்பி: (படிக்கிறான்) தீபம்? ஒளி அணுக்களின் 'பிரவாகம்’ ஒசிந்து நெளிந்து சிவப்பாய் நீலமாய்ச் சிவமாய்ச் சக்தியாய் உயிர்ச்சிலிர்ப்போடு அந்தரத்தில் ஆடும் ஆனந்த நர்த்தனம்! அந்த - நாட்டிய தீபத்தைத் தொலைவிலிருந்து பார்த்த விட்டில் - தன்னுடம்பை மினுக்கி ஒளிப்பரவசமாகி உணர்ச்சி வெளியில் மிதந்து அதைச்சுற்றிவர... என்ன இது! என் இறகுகள் பொசுங்கு கின்றனவா! தீய்க்கும் இந்த இன்ப நெருப்பை - விட்டு விலகவும் முடியாமல் தொட்டு அணைக்கவும் முடியாமல், என்ன வேதனை! இல்லைஇதுவோர் மரணசுகம்! என்ன இது? கவிஞர் முருகுசுந்தரம் 142