பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: விட்டிலின் - மரணத்தைப் பற்றி, மேகலை: அது தானில்லை, இப்பாடலில் - விட்டில் ஒரு பூச்சியன்று, ஒரு குறியீடு, நம்பி: அப்படியா? மேகலை: ஆமாம் - இதில் வரும் விட்டில் - 'தன்னையறியாமல் தன்னையிழந்து' அதனின்று தன்னை மீட்டுக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் உயிரின் தத்தளிப்பிற்குக் குறியீடு. அந்த உயிர் ஒர் - விட்டிலாகவும் இருக்கலாம்! விபசாரியாகவும் இருக்கலாம். போதைப் பழக்கத்தில் மாட்டிக் கொண்டு புலம்புபவராகவும் இருக்கலாம். நம்பி: அப்படியா சொல்கிறீர்கள்? வியப்பிற் குரியது தான் முருகுசுந்தரம் கவிதைகள் 145