பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பாட்டாளியாகக் கருதி, அவனது - பயணக் களைப்பைப் போக்கிக் கொள்ளத் தன்னோடு தேநீர் அருந்தக் கூப்பிடுகிறான். மனித நேயம் கலந்த அவன் கற்பனை என் உள்ளத்தைத் தொடுகிறது. நம்பி: வீணா! நீ ஒதுங்கிச் சிந்திக்கிறாய்! வீணா: தேய்ந்து போன பாதைகள்... எனக்குச் சலித்து விட்டன, பன்னீரை விடக் கண்ணிரும் பனித்துளிகளை விட வியர்வைத் துளிகளும் பளிங்கு மேனிகளை விடப் பசித்த வயிறுகளும் புன்னகைகளை விடப் பெருமூச்சுக்களும் என்கவனத்தைப் பெரிதும் கவர்கின்றன. சாவுகூட அழகானதாகவும் ஆராதனைக் குரியதாகவும் முருகுசுந்தரம் கவிதைகள் 15i