பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பீரமானதாகவும் எனக்குப் படுகிறது. (நம்பி வியப்போடு அவளை நிமிர்ந்து பார்க்கிறான்) நம்பி: வீணா! என்ன உளறுகிறாய்? (iணா குலுங்கிக் குலுங்கிச்சிரிக்கிறாள். சிரிக்கச் சிரிக்க அவள் விழிகளைக் கண்ணிர்ப் படலம் மறைக்கிறது). வீணா: என் சுவையுணர்வு எப்படிப் பட்டதென்று உங்களுக்குச் சொன்னேன். நான் உளறவில்லையே! தெளிவாகத்தான் இருக்கிறேன் நம்பி: 虏சாவை ஆராதிப்பதை நான் விரும்பவில்லை வீணா: நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் கிரேக்க இலக்கியத்தில் அகில்லிசின் சாவும் உரோமானிய இலக்கியத்தில் கொரியாலனசின் சாவும் இந்திய இலக்கியத்தில் கர்ணனின் சாவும் போற்றிப் புகழப்படுவதில்லையா? காதல் இலக்கியங்கள் கிளியோப் பாத்திரையின் சாவையும் கவிஞர் முருகுசுந்தரம் 152