பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணா: அவர்களை... வரிப்புலிகளாக வளர்த்து... நம்பு: வளர்த்து... வீணா: அவர்களை... விடுதலைப் போருக்கு அனுப்பி... நம்பி: அனுப்பி... வீணா: அவர்கள்தங்கள் பிறந்த மண்ணுக்காகப் போராடி நம்பி: போராடி... வீணா: ஒவ்வொருவராகப் போர்க்களத்தில் மடிவதைக் கார்க்கியின் அன்னையைப் போல் நான் பெருமிதத்தோடு நின்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். (வீணா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். நம்பி உணர்ச்சிவசப்பட்டு ஊமையாகிறான். தன்கைக்குட்டையால் அவள் கண்ணிரைத் துடைத்து விடுகிறான். வீணா அழுது கொண்டே சிரிக்கிறாள். சிரித்துக் கொண்டே அழுகிறாள். இருவரிடையே சிறிது நேரம் அமைதி நிலவுகிறது). எனககுசேக்ஸ்பியரைப் பிடிக்காது. அவன் அரசகுடும்பங்களின் கவிஞர் முருகுசுந்தரம் 154