பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோ: நாளை காலை சரியாக எட்டுமணிக்கு. நண்பர்களே! இன்று விடிவதற்குள் போராட்டத் தட்டிகளை எழுதி முடிக்க வேண்டும். விரைந்து செயல்படுவோம். காட்சி 14 இடம் : கழக வரவேற்பு வளைவிடம் நேரம் : Ꮬ jar ☾h © உறுப்பினர்: சொற்கோ தலைமையில் மாணவர் Li l- L. ff of Łfy மாணவர் கூட்டம் பல்கலைக்கழக வாயிலை அடைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் யாரும் உள்ளே செல்லாமல் கூட்டமாக நின்று கோஷமிடுகின்றனர். சிலர் செய்வதறியாது வீடு திரும்புகின்றனர்; ஆசிரியர்களோ, மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அஞ்சி, அவசரமாக உள்ளே நுழைகின்றனர். வீணா, தோகை வஞ்சி முதலிய பெண்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தோளில் ஒலிபெருக்கியைச் சுமந்த வண்ணம் சொற்கோ பேசுகின்றான். சொற்கோ: என் உயிரினும் இனிய மாணவ நண்பர்களே! நான் - தலைவணங்கும் தாய்க்குலமே! மாணவர் போராட்டம் மூன்று வகைப்படும், ஒன்று - தானாக வெடிப்பது, இரண்டு கவிஞர் முருகுசுந்தரம் 186