பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணன்: டேய்! தமிழம்மா வருகிறார். அவர்பலாப்பிசின் ஆயிற்றே! இலேசில் விடமாட்டார். தமயந்தி: தம்பி சொற்கோ! என்னடா கண்ணா இதெல்லாம்? சொற்கோ: போராட்டம் அம்மா! தமயந்தி: போராட்டமா? ஏம்ப்பா இது போராடும் வயதா? படிக்கும் வயதப்பா! சொற்கோ: ஏம்மா! தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறிய வயதில் பெரிய போராட்டத்தை நடத்தியதாக நீங்கள் தானே சொன்னீர்கள்! தமயந்தி: தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிறாயே! வள்ளுவர். உனக்காகவே ஒரு குறட்பா பாடியிருக்கிறார்! சொற்கோ: என்னம்மா அது? முருகுசுந்தரம் கவிதைகள் 171