பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமயந்தி: 'கற்றிலனாயினும் கேட்க என்று. நீ படிக்கவில்லை யென்றாலும் பரவாயில்லை! நான் சொல்வதைக் கேள்! சொற்கோ: தாயே! உங்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்; என்னை மன்னித்து விடுங்கள். கோரிக் கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஒழியப் பேச்சுவார்த்தை இல்லை. (அப்போது மாணவரிடையே சலசலப்பு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் நம்பியின் தலைமையில் உள்ளே நுழைகின்றனர்) இந்திரஜித்: துரோகிகள்! மாணவர்கள்: ஒழிக! இந்திரஜித்: அவர்களைஉள்ளே விடாதீர்கள்! தடுத்து நிறுத்துங்கள்! (மாணவர்கள் கைகலப்பிலும் கல்விச்சிலும் ஈடுபடுகின்றனர்) காட்சி 15 இடம் : பல்கலைக் கழக மருத்துவமனை நேரம் : LD Tడు) Q} உறுப்பினர்: நம்பி, மேகலை, வீணா, தோகை, மருத்துவர் மற்றும் மாணவர்கள் சிலர் கவிஞர் முருகுசுந்தரம் 172