பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகுடிக்குத்தான் கட்டுப்படும். மாணவர்கள் உங்களுக்குத்தான். கட்டுப் படுவார்கள். மேகலை: என்னிடம் ஏது மகுடி? துணைவேந்தர்: உங்கள் பேச்சு! உங்கள் கவிதை! உங்கள் ஆளுமை! மாணவர்கள். உங்களைக் கண்டால் வெள்ளாடுகளாக உங்கள் பின்னால் தலையாட்டிக் கொண்டு ஒடி வருகிறார்கள். நீங்கள் சொன்னால் மறுக்க மாட்டார்கள். இந்த வாரத்தில்கல்வி அமைச்சர் இங்கு- - வருகை தருகிறார். இந்தப்பல்கலைக்கழகத்தின் கெளரவமே உங்கள் கையில்தான் இருக்கிறது. எப்படியாவது... மேகலை: முயன்று பார்க்கிறேன் (மேகலை விடைபெற்றுச் செல்லுகிறார்) முருகுசுந்தரம் கவிதைகள் 179