பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

into Womanhood) தொடங்கி, அம்மானுடப் பெண்ணைத் தெய்வத் 56376olośG 2 uuri#g/ub Gl_fäGı gör (Initiation into Godhood) #laopopuò வகையில் அமைக்கப்பட்டது சிலப்பதிகாரம்' என்று பேராசிரியர் கா. செல்லப்பன் அக்காவியக் கட்டமைப்பைப் புகழ்ந்துரைக்கிறார். நாட்டு வளம், நகர்வளம் பாடி நுழையும் பல குறுங்காவியங்களில், செறிவான கட்டமைப்பைக் காணல் அரிது. கவிஞர் முருகுசுந்தரத்தின் இந்தக் காவியம் ஐந்து காண்டங்களில் அகலிகையின் கதையைச் செறிவான நடையிலும் சிறப்பான வடிவத்திலும் வழங்குகிறது. உயர்ந்த காவியங்களில் உள்ளத்தை வசீகரிக்கும் அழகுகளும், மாறாத ஈர்ப்புத் தன்மை வழங்கும் வாழ்வின் சோக நிழல்களும், வியப்புணர்ச்சி எழுப்பும் அதிர்ச்சியானசம்பவங்களும், மன எழுச்சிதரும் சீரிய சிந்தனைகளும் நிறைந்திருக்கக் காணலாம். அகலிகைப் புராணம் ஆண்-பெண் கவர்ச்சி மற்றும் உறவுகளைக் குறிப்பொருளாகக் (Motif) கொண்ட அடிக்கருத்துக்களால் (theme) கட்டப்பட்டது. எனவே காலங்காலமாகக் கவிஞர்களை இம்சைப்படுத்தும் கவர்ச்சி, அகலிகைத் தொன்மத்தில் நிறைந்திருப்பதைக் காணலாம். இதன் பொருண்மையில் ஆண்-பெண் கவர்ச்சியும், உடற்பசி நிறைவேற்ற்ம் குறித்த சிக்கல்களும் பின்னிக் கிடக்கின்றன. ஆண்-பெண், தேவர்-மனிதர், துறவி-காமுகன், தந்திரம்-அறியாமை, பாவம் சாபம், உடல் உள்ளம், அடிமைத்தனம்-விடுதலை, நிழல்-நிஜம்-இப்படிப் பல முரண்களும் எதிர்வுகளும் நிறைந்த அகலிகைத் தொன்மத்தில் காவிய ஈர்ப்புச் சக்தியும் கதைக் GLLGOLDL LjLô 'e_Gld THpub" (Transformation motif) GT6ārp குறிப்பொருளில் நிலை கொண்டிருக்கின்றன. காலைக் கோழியாகவும் கெளதம முனிவனாகவும் உருமாறி வரும் இந்திரன், பாவத்தால் கல்லாக மாறும் அகலிகை, சாபத்தால் வேட்கை உறுப்பாக உருமாறும் உம்பர்கேன், இராமனின் பாதம் பட்டுச் சாபவிமோசனத்தால் கல் நித்திரையிலிருந்து மீளும் அகலிகை ஆகிய உருமாற்றங்களில் இடம்பெறும் வேட்கை, காட்சி மாயம் கருணை போன்ற உணர்வுகள் அகலிகைத் தொன்மத்திற்குக் கவர்ச்சியும் கருத்தும் தருவதால் சது.க. யோகி முதல் கோவை ஞானி வரை பல தமிழ்க் கவிஞர்கள்தம் படைப்புச்சக்திகளைக்கூர் ஏற்றிக்கொள்ளும் களமாகவும், புராணநாயகர்களையும் பழம்மதிப்புகளையும் விசாரணைசெய்யும் கருவி யாகவும் அகலிகை கதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். கவிஞர் முருகுசுந்தரம் வழக்கமான இந்த உருமாற்றங்களைச் சித்தரித்துக் காட்டுவதுடன், சர்ரியலிசப் புனைவுகளின் மூலமும், காவிய நாயகியின் மனப்பிரம்மைகளின் மூலமும் மேலும் பல உருமாற்றங்களையும் தம் காவியத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். முருகுசுந்தரம் கவிதைகள் 1 3