பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: காந்தியடிகள் அமைதிநெறியில் போராட்டம் நடத்தவில்லையா? வீணா: பாஞ்சால வீரன் பகத் சிங்கின் வெடிகுண்டையும் செளரி செளரா தகனத்தையும் அவரால் தடுக்க முடிந்ததா? ஆயிரம் ஆயிரம் சுதந்திர வீரர்களின் குருதிப் பூத்தானே சுதந்தரம்? நம்பி: உண்மைதான்! ஆனால்வன் முறை வென்றதாக வரலாறில்லை நெப்போலியனின் வன்முறை அவனுக்குஅமைதியான சாவை வழங்கவில்லை. ஐரோப்பாவையே அவன் சுடுகாடாக்கினான். ஹிட்லரின் வன்முறை ஜெர்மானிய இனத்தையே அரை நூற்றாண்டுகள் கூறுபோட்டு ஆறாத்துயரில் ஆழ்த்தியது. சதாம் உசேனின் வன்முறை அவன் நாட்டு மக்களைச் சாக்கடைத் தண்ணிரையும் கவிஞர் முருகுசுந்தரம் 186