பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈழத்தமிழரின் ஆற்றலைச் சிதறடித்து விடவில்லையா? உங்கள் ஆற்றல் சிதறாமல் ஒரு முகப்படுத்தப் பட்டிருந்தால் உங்கள் குறிக் கோளை என்றோ எட்டியிருப்பீர்கள். வீணா: ஈழத் தமிழ்க் குழந்தை பிறக்கும் போதே துப்பாக்கியோடு பிறக்கிறது. ஈழத்தில்கடைசித் தமிழன் இருக்கும் வரை போராட்டம் இருக்கும். நம்பி: உன்னுடைய வீரவசனம் கேட்பதற்குச் சுவையாக இருக்கிறது. தமிழினம் அழிந்தபிறகு தமிழீழம் எதற்கு? உங்கள் குறிக்கோளை அடையச் சமாதானத் தீர்வே கிடையாதா? வீணா: சமாதானப் பேச்சு என்பது எங்களை நோக்கி எங்கள் பகைவர்களால் அடிக்கடி வீசப்படும் பட்டு வலை! ஒவ்வொரு முறையும் நாங்கள் அதில் சிக்கிச் சீரழிந்ததுதான் மிச்சம். முருகுசுந்தரம் கவிதைகள் 189