பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: வீணா! எந்தப் போராட்டத்துக்கும் ஒர் எல்லை இருக்கிறது. வன்முறைமீண்டும் வன்முறைக்குத்தான் வித்திடும். சமாதானந்தான். நிலையான தீர்வைத்தரும். இதை நீபார்க்கத்தான் போகிறாய்! (எழுந்து செல்கின்றனர்) காட்சி 19 இடம் * ஆங்கிலப் பேராசிரியர் அறை நேரம் > பிற்பகல் உறுப்பினர்: ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாகன் கணிதப் பேராசிரியர் கனகசபை கல்லூரி இடைவேளை. ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசன் கொண்டுவந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு, மேலங்கியைக் சுழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, உண்டகளைப்புத்தீரப் பெஞ்சின் மீது படுக்கிறார். பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட நாளில் போடப்பட்ட மின்விசிறி கடக் கடக் ஒலியோடு ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக ஒடிக் கொண்டிருக்கிறது. அருகில் இருந்த கட்டுரை ஏடுகளைத் தலையணையாக்கித்தலை சாய்க்கிறார் பேராசிரியர். கொஞ்ச நேரம் அறிதுயில். யாரோ செருப்பை இழுத்திழுத்து நடந்து வரும் ஒசை மெதுவாக அவர்காதில் விழுகிறது. உடனே யாரென்று புரிந்து கொண்டு எழுந்து உட்காருகிறார். தமது பருவுடலின் பாரத்தைச் சுமந்துகொண்டு நீராவி இயந்திரத்தின் பிஸ்டனாகப் பெருமூச்சு விட்ட வண்ணம் கணிதப் பேராசிரியர் கனகசபை உள்ளே நுழைகிறார். சீனி : யார் கனகசபையா வரணும்! வரணும்! கவிஞர் முருகுசுந்தரம் 190