பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை யானை அமரர் தலைவன் இந்திரனின் வாகனம். இந்தக் காவியத்தில் யானை ஒரு குறியீடு' ஆகி, அகலிகைத் தொன்மத்திற்கு இணையாக வேறொரு தொன்மம் ஆகிவிடுகிறது. யானைப் பசிக்கு அகலிகைக் கரும்பு காத்துக்கிடப்பது கனவுகளிலும் பிரமைகளிலும் அகலிகையுடன் நிகழ்கிறது. இந்திரன் அகலிகை சங்கமத்துக்கு முன்பே அகலிகையின் மனவெளியில் அடையாளம் தெரியாத ஒரு யானை அலைகிறது. அச்சமும் ஆவலும் கலந்த யானைப் பிரமை (Elephant Phobia) அவள் உள்ளத்தில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றது. முதற் காண்டத்தில் கன்னி அகலிகை கங்கையில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அவள் தன்னையிழந்து மெய்மறந்து நிற்கும்போது, யானையின் கழுத்து மணியாகக் குலுங்கிச் சிரிக்கும் தபோவனத்துச் சேடியர்கள் 'அகலிகை! அடியே அகலிகை!” என்றழைக்கும் ஆரவாரக்குரல் அவளுடைய பிரமையைக் கலைத்ததாகத் கவிஞர் வருணிக்கிறார். யானையின் கழுத்து மணியோசை இங்கு சேடியரின் சிரிப்பலைக்கு உவமையாகிறது. முதல் இரவில், கெளதமனின் கையில் உள்ளகமண்டலத்தின் மூக்கு அகலிகையின் கண்களுக்கு யானையின் தும்பிக்கையாகத் தோற்றம் தருகிறது. காண்டம் நான்கில், ஆசிரம அகலிகை காட்டில் சமித்துகள் பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, வானத்தில் சிறகு முளைத்த வெள்ளை யானை நவமணிப் பூண் இழைத்த நான்கு கொம்புகளோடு ஆண்மையின் மதர்ப்பு நிறைந்த அசைவுகளுடன் அகலிகையை வலம் வருகிறது. அப்போது அகலிகையும் (காஃப்காவின் கதாநாயகன் போல உருமாற்றம் பெற்று) கவுள்களில் நாணம் வழியும் பெண்யானையாகி விடுகிறாள். இவ்வாறெல்லாம் அகலிகையின் மனமெங்கும் ஒரு 'யானைத் தீ பற்றி எரிவதாகக் கவிஞர் காட்டுகிறார். சிறுமி அகலிகையைத் கவிஞர் முதன் முதலாக அறிமுகம் செய்யும்போது. சுற்றி யெரியும் ஓம குண்டத்தின் உச்சியில் மெலிதாக அசைந்தாடும் நீல நிறத் தீக்கொழுந்து கவிஞர் முருகுசுந்தரம் 14