பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடி: என்ன தம்பி! கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்பி: ஒரே மாதிரியான செக்கு சுற்றும் வாழ்க்கைதான். பழகிப் போய்விட்டது. வீட்டில்அப்பா அம்மா எப்படியிருக்கிறார்கள்? நெடுமுடி: நலந்தான் உன்னை விசாரித்தார்கள். நம்பி: என்ன திடீரென்று இப்பக்கம்...? நெடுமுடி: காவல்துறைப் பணியாளன் காலத்தையும் இடத்தையும் கடந்தவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் செல்ல வேண்டியவன். ஒரு பயங்கரவாதக் கும்பலைப்பற்றி உளவறிய வந்திருக்கிறேன். நான் யார் என்பதைப் பற்றியோ எதற்காக வந்திருக்கிறேன் என்பது பற்றியோ யாருக்கும் தெரியக்கூடாது. நம்பி: பயங்கர வாதமா? கவிஞர் முருகுசுந்தரம் 194