பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சாவரம் காட்டுப் பகுதியைப் பார்வையிடப் போகிறேன் நீயும் வர வேண்டும். நம்பி: சரி அண்ணா! (நம்பி விடைபெற்று விடுதிக்குத் திரும்புகிறான்) காட்சி 21 இடம் : பிச்சாவரம் காட்டுக்கடல் அரிப்பு நேரம் : இளங்காலை உறுப்பினர்: நம்பி, நெடுமுடி நெடுமுடியும் நம்பியும் கடல் அரிப்பில் படகில் சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும்.மயானஅமைதி. சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அடந்தகாடும், அதில் விநோதமாக வளர்ந்திருக்கும் சுரபுன்னை மரங்களும் அச்சந்தரும் அமைதியை எங்கும் பரப்பிக் , கொண்டிருக்கின்றன. தொலைவில் சிறு புள்ளியாக ஒரு தனிப்படகு தென்படுகிறது, பறவைகளின் கீச்சொலியும், படகைத்தள்ளும் துடுப்போசையும் தவிர வேறு ஒசை எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. நம்பி: தனியாக யாரும் இங்கு வர அஞ்சுவர் நெடுமுடி: காடும் இந்தக் கடற்கானலும் இதைச் சுற்றியுள்ள ஊர்களும் ஒரு காலத்தில் பிச்சாவரம் ஜமீனுக்குச் சொந்தமாக இருந்தவை. முருகுசுந்தரம் கவிதைகள் 2O1