பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 22 இடம் : மரத்தின் நிழல் நேரம் : 星的好夺Q》 உறுப்பினர்: நம்பி, வீணா, மருத்துவக் கல்லூரியை ஒட்டிய விளையாட்டு வெளியில் ஒரு புன்னை மரநிழலில் நம்பி அமர்ந்திருக்கிறான், அவன் உள்ளம் குழம்பிப் போயிருக்கிறது. பிச்சாவரம் கடலரிப்பில் அவன் கண்ட படகுக் காட்சி அவன் அகக்கண்ணில் தோன்றித் தோன்றி மறைகிறது. தான் கண்டது உண்மையா, உருவெளித்தோற்றமா என்ற ஐயம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. கண்களை மூடிய வண்ணம் அமர்ந்திருக்கிறான். அப்போது அவன் உள்ளம் பேசுகிறது. நம்பி: (தனக்குள்) என்னால் நம்பமுடியவில்லை. கண்களே! என்னை ஏமாற்றிக் கவலைக் கடலில் தள்ளிவிடாதே. பெண் என்பவள். மாயை யென்ற வறட்டு வேதாந்தத்தை நம்பும்படி செய்து விடாதே! படகில் வந்துஎன் எதிரில் ஒடி மறைந்த அந்தப் பெண் வீணாவாக இருக்கமுடியாது இருக்கவும் கூடாது. என் இதய வீனையில் <g)ị L! #{TLf)fT! என்னால் நம்ப முடியவில்லை. மயிலுக்கு கவிஞர் முருகுசுந்தரம் 204