பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயானத்தில் என்ன வேலை? என் உள்ளத்தில் படர்ந்த கொடிமுல்லை சுரபுன்னைக் காட்டில் ஏன் தனியாகப் படர்ந்தது? யாருக்காகப் படர்ந்தது? மனமே. நீ சிந்திக்க மறந்துவிடு அப்போது தான் எனக்கு அமைதி. (சிந்தனைக் களைப்பால் கண்ணை மூடிச் செயலற்ற நிலையில் இருக்கிறான் நம்பி. அப்போது அவன் தோள்மீது சில்லென்ற - மலர்க்கரம் ஒன்று விழுகிறது. கண்ணைத் திறந்து பார்க்கிறான். இளங்காலைப் பொழுதாக எதிரே நிற்கிறாள் வீணா.) வீணா: உங்கள். மோன நிலையைக் குலைத்துவிட்டேனா? சில நேரங்களில் நீங்கள். ஞானியாகி விடுகிறீர்கள், நம்பி; (தனக்குள்) இந்த நிலவு களங்கமில்லாதது. இந்த விடியல் நிர்மலமானது. இந்தப் பூங்காற்று புழுதி கலவாதது. (வெளிப்படையாக) வா வீணா! வீணா: கண்ணை மூடிக்கொண்டு அப்படியென்ன கற்பனை? முருகுசுந்தரம் கவிதைகள் 205