பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றிருந்தேன். (நம்பி வீணாவின் கையை மெதுவாகப் பற்றுகிறான்.) நம்பி: நம் திருமணம் எப்போது நிச்சயிக்கப்படும்? வீணா: நம் திருமணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதுதான் உங்களைக் கைப்பிடிக்க நான் தயார். (நம்பி அதிர்ச்சி கலந்த வியப்போடு அவளைப் பார்க்கிறான்) நம்பி: நமது பெற்றோர் சம்மதிக்க வேண்டாமா? வீணா: கூடி வாழப் போவது நாம்; நமது சம்மதம் போதுமே! நாளைநமது நண்பர்களை வரவழைத்து விருந்து கொடுத்து நாம்கணவன் மனைவியென்பதை அறிவித்து விடுவோம் பிறகு... நம்பி: பிறகு! வீணா: குடும்பம் நடத்தவேண்டியதுதான் (சிரிக்கிறாள்.) நம்பி: திருமணம்...? முருகுசுந்தரம் கவிதைகள் 2O7