பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை மழை பொழிவதுபோல் எதிர்பாராமல் அன்பைப் பொழிந்தாள். என்னோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரும்பினாள். ஆனால், 'திருமணம் என்ற சடங்கு தேவையில்லை, என்றாள். அவள் பேச்சிலும் செயலிலும் ஒர் பதற்றம்... துடிப்பு... அவசரம்: அவளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேகலை: அவளைக் கடைசியாகச் சந்தித்து எத்தனை நாட்களிருக்கும்? நம்பி: ஒரு வாரமாகிறது. மீண்டும் அவள் என் கண்ணில் படவில்லை. அவளுடைய தோழியர்களை விசாரித்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் முருகுசுந்தரம் 212