பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்று கைநீட்டும் ஆண்மையின் கெளரவமாக உயர்த்திவிடுகின்றன. அகலிகைக்குச் சாப விமோசனமாகக் கற்பகச் சோலைக்குள் செல்ல அனுமதி கிடைத்ததா? அல்லது அவள் கனவு திரிசங்கு சொர்க்கம் போல் அரைகுறைப் பயணமாகிவிட்டதா என்பதில் வேண்டுமானால் ஐயங்கள் இருக்கலாம். ஆனால் கவிஞர் முருகுசுந்தரத்தின் 'வெள்ளை யானை' தமிழ்க் கவிதையைப் புதிய கற்பகச் சோலைக்குள் கொண்டு சென்றுவிட்டது. இனிவரும் பக்கங்களில் வெள்ளை யானையையும் தமிழ்க் கரும்பினையும் இனிது சுவைக்கலாம். வெள்ளை யானை 'அகல்யா என்ற சொல்லுக்கு அழகில் குறைவற்றவள் என்று பொருள். முதன் முதலில் தோன்றிய வால்மீகி இராமாயணக் கதாபாத்திரமான அகல்யா, தோண்டத் தோண்ட வற்றாத ஒரு காதற் சுரங்கம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ச.து. சு. யோகி இருவரும் இதைக் காப்பியமாக்கினர். புதுமைப்பித்தன் வெங்கட்ராமன் போன்ற மேதைகள் அழகிய சிறுகதை ஆக்கினர்; பிரபஞ்சன் குறுநாடகமாக வடித்தார்: கோவை ஞானி அரசியல் கோணத்தில் புதுக்கவிதை ஆக்கினார். நான் அகல்யாவை மீமெய்ம்மைப் பாத்திரமாகச் (Surrealistic Character) @#5?:55, ciró Graśī. இளமையில் அகல்யாவின் அடிமனத்தில் ஏற்பட்ட ஏக்கங்களும், ஏமாற்றங்களுமே அவள் வாழ்க்கையின் பின்விளைவுகளாக உருப்பெற்றன என்பது இக்காப்பியத்தின் அடிப்படை. நசுக்கப்பட்ட பெண்ணியம் தன் விலங்கொடித்துக் குமுறி யெழும் சீற்றத்தை இக்காப்பியத்தில் காணலாம். “Surrealism is irrational, illogical, disruptive and subversive” கவிஞர் முருகுசுந்தரம் 16