பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையடி வாரத்தில் மாடுமேய்க் கின்ற சிலைபோல் அழகுச் சிறுமி யொருத்தி அப் பாடலைக் காற்றில் பரப்பிக்கொண் டிருந்தாள். காகித வீணையைக் கையில் ஏந்திக் சிறுவன் ஒருவன் இன்னிசை கூட்டினான். திருச்செங் கோட்டில் வாழ்வோர்க் கெல்லாம் பரிச்சய மான பாடல் இப்பாடல். பாடிய கோதையை நினைத்தேன்; நினைவுகள் ஓடின, திரைப்படம் ஒடுவது போலே. பணத்தோட்டப் பைங்கொடி கொக்கரக்கோ எனக்கூவும் குடுமிச் சேவல் கூப்பாட்டைக் கேட்டவுடன் பரிதிச் செல்வன் அக்கரையில் கண்விழித்தான்; இருட்டுப் பாயை அடிவானில் சுருட்டிவைத்தான்; தான் வரைந்த செக்கர்வான் வெட்கமுற மாடி மீது செழுங்கதிரொன் றெழுந்திருக்கக் கண்டான்; ஒடி அக்கணமே மேகத்தில் மறைந்து பார்த்தான்; அழகரசின் ஆதிக்கம்; அவள் தான் கோதை! வெடித்தவுடன் பாளையிலே புதிய பூக்கள் வேர்மீதில் உதிர்வதைப்போல் கையைத் தூக்கி உடற்சோம்பல் முறித்தவுடன் அவளு டம்பின் ஒய்யாரம் காலடியில் சிந்தும்; பட்டுப் படுக்கைமஞ்சம் இவ்வழகி மீண்டும் வந்து பள்ளிகொள்ள மாட்டாளா என்று நையும்; அடிக்கால்கள் இவளுடம்பைத் தாங்கித் தாங்கி ஆனந்தக் களிப்பாலே செருக்குக் கொள்ளும். முருகுசுந்தரம் கவிதைகள் 223