பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ணுகையில் உதட்டசைவும், புரண்டு கண்கள் உறங்குகையில் உறுப்பசைவும் அன்றிச் சற்றும் தன்னுடம்பை அசைக்காத முதலி யாரின் தாகத்தைத் தணிப்பதற்கு, மூச்ச டக்கி மண்ணெடுத்தும் கல்லுடைத்தும், நெருப்பில் வெந்தும் மாட்டைப்போல் பொதிசுமந்தும், இடுப்பொ டிந்தும் எண்ணற்ற பாட்டாளி மக்கள், தங்கள் இரத்தத்தை வியர்வையினைச் சிந்தி வந்தார். வல்லெழுத்தைச் சொல்லென்று கேட்ட தாலே வாத்தியார் மீதொருநாள், அச்ச மின்றிக் கல்லெடுத்து வீசிவந்த வீரா சாமி காதல்மகன் அவருக்கு; வாழ்க்கைப் போரை வெல்லுகின்ற ஆடவரின் நடுவில், ஆறாம் விரல்போலப் பயனின்றிப் பிறப்பெடுத்தோன்; வல்லவர்கள் நல்லவர்கள் நடுவில், வீணாய் வளர்ந்திருக்கும் சாப்பாட்டு வெள்ளித் தூக்கு. பிணக்காட்டை வறுமையினால் நிரப்பு கின்ற பெருமைபெற்ற இந்நாட்டில், இந்த முண்டம் பணக்காரன் பெற்றமகன் என்று கூறும் பயனற்ற தகுதியன்றி, வேறாய் ஒன்றும் தனக்கேதும் தகுதியில்லா திருந்தும், ஊரில் தலைகொழுத்துத் திரிந்துவந்தான்; தமிழர் நம்பும் வினைப்பயன்கள் திட்டமிடும் பொருளாதார வேடிக்கைக் கிவனன்றோ எடுத்துக் காட்டு! முருகுசுந்தரம் கவிதைகள் 225