பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிகின்ற தீபத்தின் கொழுந்தைக் கண்ணால் இருவருமே தூண்டிவிட்டார்; காதற் பட்டம் பெருமூச்சால் மேலெழும்ப, வலைச்சி லந்திப் பின்னலெண்ணம் பின்னியதில் தாமே வீழ்ந்தார். வரும்போகும் உயிர்மூச்சைப் போலக் கோதை வாசலுக்கும் உள்ளறைக்கும் நடந்த வண்ணம் பெரும்போதை நாள்தோறும் கழிப்பாள்; கண்ணன் பேச்செல்லாம் கடைக்கண்ணில் பேசித் தீர்ப்பான். வருமழைக்கு முன்னுடைந்து பறக்கும் மேக வட்டாரக் கூந்தலினைக் குளித்து விட்டுச் சிறுபவளக் காம்புவிரல் நாட்டி யத்தால் சிக்கறுத்துக் கொண்டிருப்பாள்; பனியில் மூழ்கி விரியுமெழிற் புதுக்கோல மலர்க்கன் னத்தில் விளையாடி விளையாடி எழுந்து கீழே சரிகின்ற பார்வையினை அனுப்பி வைப்பாள்; சட்டென்று வியர்வையிலே அவன் குளிப்பான். கடுங்குளிரால் வாடும் காதல் நெருப்பு ஒளிப்பளிங்குத் தண்ணிரில் இருள்திரவம் வீழ்ந்து ஒளிமாலை பசப்படைந்து கற்பிழந்த நேரம். கொடுக்குப்போல் ஒருகோடு நிலவாக வானில் கொட்டுதற்குக் காத்திருந்து கொல்லுகின்ற நேரம் அடைத்திருக்கும் தெருவாயில் அழகுபெறும் நேரம் முருகுசுந்தரம் கவிதைகள் 227