பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிக்காத செம்பொன் பேழை நவநிதியம்; பேழை நவநிதியம் பிச்சைக்கு ஏங்குகிறேன். வாரி அமுதிறைக்கும் வசந்த இசைக்குயிலி; வசந்த இசைக்குயிலி வாய்ப்பாட்டுக் கேங்குகிறேன். குளித்துக் குளித்துக் குளிர்ந்த மழைமேகம்; குளிர்ந்த மழைமேகம் குளிப்பாட்ட ஏங்குகிறேன். ஆக்கிக் குவித்த அறுசுவை ஆரமுது ; அறுசுவை ஆரமுது அரும்பசியால் வாடுகிறேன். கனிந்து குளிர்போக்கும் காதற் பெரு நெருப்பு; காதற் பெரு நெருப்பு கடுங்குளிரால் நடுங்குகிறேன். இன்னிசைக் காந்தம் இழுக்க எழுந்து தன்னை மறந்து நடந்தான் கண்ணன். மெல்லிடைக் கோதை நாளும் மிதிக்க மல்லாந்து கிடக்கும் மார்புப் படிகளில் ஏறினான்; மாடியில் இசைக்குயில் மகிழ்ந்து வாரி இறைத்த அருவியில் குளித்தான். இருவிழி வண்டுகள் வீணையில் மொய்க்க சிறுவிரல் நண்டுக் கரங்கள் நடக்க வாய்மலர் விரிந்து வண்டமிழ்த் தேனை ஓயாது பிலிற்ற உட்கார்ந் திருக்கும் இதய நாயகியை இமைக்காமல் பார்த்தான். தண்டு வீணையில் அவன்நிழல் விழுந்ததும் முருகுசுந்தரம் கவிதைகள் 229