பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை விழிகளைத் தூக்கினாள் கிளிமகள். துள்ளிய மெல்லிசை அறுந்தது; பார்வையால் அள்ளி விழுங்கினால் அவன்பே ரழகை. ஒருசில நொடிகள் ஊமை நாடகம். பின்னும் இதழ்களை மெல்ல விரித்துக் 'கண்ணா!' என்றாள்; மீதிச் செய்திகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டான். 'ஈரோட் டுக்குத் தந்தை சென்றார்; வீரா சாமி விடிந்துதான் வருவான். இனிக்கும் நினைவுடன் இன்றிரா தனிமையில் கனிக்குலை உமக்காய்க் காத்துக் கிடக்கும்' என்றாள் கோதை, கண்ணன் ஏகினான். நாணி மென்காற்று நடந்தது சாளரத்தில் கண் விளக்கு மூடிக் கடைதுங்கக், கண்கூசும் மின்விளக்கெல் லாமணைத்து, மின்னுகின்ற சின்ன படுக்கை அறைவிளக்கைப் பாவையர்கள் ஏற்ற அடிக்கடி நாய்குரைக்க அவ்வூர் அடங்கியது. மாடிமேல் கண்ணன், மடிமேல் அவன்கோதை, ஒடித் திரைவிலக்கி உட்புகுந்த மென்காற்று நாணி மெதுவாய் நடந்தது சாளரத்தில். தோட்டுக்குள் சீப்பாகத் தோன்றுகின்ற வாழைப்பூக் காட்டும் அவளுடைய கைவிரலைப் பற்றியே முத்தமிட்டான் கண்ணன், முகம்சேர்த்தான்; 'கண்ணே! பணத்தோட்டப் பைங்கிளியே! பஞ்சை நான் உன்னை அணைக்கப் பொறுப்பானோ உன்னப்பன்? என்றவளைக் கேட்க மனங்கொண்டான்; வாய்திறந்து கேட்கவில்லை. வாட்கண் அணங்குந்தன் வாய்திறந்து 'கண்ணாளா! கொட்டுகின்ற என் தந்தை பார்வைக் கொடுக்குக்குள் கவிஞர் முருகுசுந்தரம் 230