பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றியிருந்த புதர்களும் மரங்களும் பூத்துக் குலுங்கின. எதிரில் ஒருபுள்ளி கோடாகிக் கொம்பாகி வெள்ளி ஒடமாக மாற நடுவில்வண்ணத்துப் பூச்சியின் இறக்கையே பாயாக நீண்ட சிப்பித் துடுப்பசைத்து, உடம்புக்கும் உடுப்புக்கும் வேறுபாடு தெரியாத தேவகன்னியர் அவளை நோக்கி வந்தனர். இதற்குமுன் கேட்டிராத ஒரு தேவகானம்ஒரு கந்தர்வ இசை வரவேற்க அகலிகை - அப்படகில் ஏறினாள். அனுபவித்திராத ஒர் உணர்ச்சி வெள்ளம் அலையலையாகப் பரவி மெல்லிய அதிர்வுகளாக அவளுள் இறங்கியது. உடம்பே உயிராக மாற எளிதில் புலப்படாத ஏதோ ஒன்று அவளையும் அப்படகையும் இழுத்துச் செல்வதை உணர்ந்தாள். கண்ணுக் கெட்டிய தூரத்தில் உடம்பெல்லாம் வாயாகப் புன்னகைக்கும் கந்தர்வன் கவிஞர் முருகுசுந்தரம் 18