பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நனவை அறுக்கும் நடுக்கக் கனவு காலையிலே முணுமுணுக்கும் இசைப்பாட் டோடு கட்டழகி கண்மலர்ந்தாள்; கலைந்தி ருந்த சேலையினைச் சரிசெய்தாள்; நிலைக்கண் ணாடி சிரிக்குமவள் முகப்பளிங்கில் தன்னைப் பார்க்கக் கோலமயில் போலெதிரில் நின்றாள். முன்னால் குறும்புசெயும் கூந்தலினை ஒழுங்கு செய்தாள்; வாலிபத்தேர் ஏனின்னும் காணோம் என்று வரிவிழியில் வினாக்குறியை நிறுத்தி வைத்தாள். 'நாலாயி ரத்தோடு சரக்கு வாங்க நம்கணக்கப் பிள்ளையினை விடியற் காலை மேலுருக் கனுப்பிவைத்தேன் : தஞ்சை சென்று மேலகரம் பிள்ளையினைப் பார்த்து விட்டு நாலைந்து நாட்கழித்து வருவான்’ என்று நடைவீட்டில் தந்தையிடம் அண்ணன் சொன்ன போலியுரை அவள்கேட்டாள்; நத்தை நாட்கள் போகுமா சீக்கிரத்தில் என்று நைந்தாள். ஐந்தோடு பத்துநாள் ஆன பின்னும் அழகரசன் வரக்காணோம்; மாடி அன்னம் சிந்தையினைச் சுடுகின்ற நெருப்புத் துன்பச் சிதையின்மேல் துடிதுடித்தாள்; பணம்போச் சென்று தந்தைமகன் இருவருமே புனுகு பூனைத் தவிப்போடு கூடத்தில் திரிந்தார்; 'கண்ணன் இந்தவிதம் செய்வானென் றெண்ண வில்லை’ என்று சொன்னார் ஊர்மக்கள் இடத்தில் எல்லாம். முருகுசுந்தரம் கவிதைகள் 235