பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசைப்பிண்டம் செங்குருதி ஒட்டம், உன்மேல் சஞ்சரிக்கும் புல்லரிப்புப் பார்வை, யாவும் கசக்கிவிட்டு நிற்கின்ற ஆவி மேகம் கண்ணன்தான்; கணிப்பேச்சால் உன்வாய் வண்டு வசப்படுத்தி மொய்க்கமுடி யாமல், காலன் வரைந்தபுகைப் பூ என்று, கிழிந்து போன இசைப்பெட்டிக் குரலாலே கண்ணன் சொன்னான்; இருவிழியால் முத்துக்கள் உதிர்த்தாள் கோதை. உச்சிமலை மீதிருந்து வீராசாமி உருட்டியெனைக் கொன்றுவிட்டான்; பந்த லிட்ட பச்சைமரக் காட்டுக்கு நடுவே, நாகர் பள்ளத்திற் கருகென்னைப் புதைத்தான்; காட்டுப் பிச்சிப்பூக் கொடிபடரக் கவிந்த கொன்றைப் பெரியமரம் குடைப்பிடிக்கப், பாடும் வண்டுச் சச்சரவுச் சுனைப்பூக்கள் கண்விழிக்கும் சரிவினிலே துணையின்றி உறங்கு கின்றேன். 'குலையீந்து போற்செழித்துச் சரிந்த உன்றன் கூந்தலன்றோ எனைப்பிணித்த பாசம்; அந்த அலைமீது புரள்வதென்றால் இன்னம் கூட அடுத்தடுத்துப் பத்துமுறை சாவேன்; அந்தத் தலைவிழுதை என்மீதில் இறக்கிக் கண்ணிர்த் தாரைகளால் குளிப்பாட்ட என்னைத் தேடிச் சிலையழகி ஒருமுறைநீ வந்தால் போதும்; செத்ததற்கு நான்வருந்த மாட்டேன்' என்றான். முருகுசுந்தரம் கவிதைகள் 237