பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையோ ஊரில் இல்லை; தறுதலை வீரா சாமி அந்தியில் வருவான் என்ப தறிந்ததும் கோதை உள்ளம் பந்தயக் குதிரை யாகப் பார்வதிப் பணிச்சி யோடு சந்தன மரங்கள் சூழ்ந்த சாரலை நோக்கிச் சொன்றாள். கடும்புதர் விலக்கிக் காவிக் கால்களில் முட்கள் தைக்க உடும்புபோல் சரிவில் ஏறி உட்கார்ந்து நடந்து, பூத்த தடஞ்சுனை அருகில் காதல் தலைவனின் படுக்கை கண்டாள்; கொடுந்தொழிற் குண்டு பாய்ந்த கூந்தல்வால் மயில் போல் வீழ்ந்தாள். 'கட்டிலில் எனது மார்பில் கனிந்தவென் கனவே பூமித் தொட்டிலில் எனைம றந்து தூக்கமா? கண்ணே! என்று நெட்டுயிர்ப் போட ணைப்பீர்! நெருக்குவீர்! என்னி டுப்பைத் தொட்டணைக் கின்ற அந்தத் துடுக்குக்கை எங்கே காணோம்? முருகுசுந்தரம் கவிதைகள் 239