பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அடிமுதல் முடிவ ரைக்கம் அளக்கின்ற கண்க ளெங்கே? முடிமீதும் முகத்தின் மீதும் மொய்க்கின்ற இதழ்கள் எங்கே? கொடிபோல நான் படுக்கும் கோபுரத் தோள்க ளெங்கே? வடிகின்ற செந்த மிழ்த்தேன் வார்த்தைவாய் வீணை யெங்கே? 'நெருங்கிய காதல் வாழ்க்கை நிலையற்ற வான வில்போல் வெறுங்கன வான பின்னர் வேறென்ன எனக்குத் தேவை? கருங்குழல் எரிந்த பின்னர் கரியேது? சாம்ப லேது? வருங்காலம் என்ப தெல்லாம் வாழ்வினில் இனிமேல் ஏது? 'குளிர்நிழல் கவிக்கும் பச்சைக் கூடார மரமே ஒடித் தளிர்க்கரத் தால் மரத்தைத் தழுவிடும் கொடியே! என்றன் அழகனும் நானும் உம்போல் ஆருயிர் தளிர்க்கக் கட்டித் தழுவினோம் என்ப தல்லால் தவறென்ன செய்து விட்டோம்? கவிஞர் முருகுசுந்தரம் 240