பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குளிர்சுனை நடுவில் பூத்த குமரியே குவளைப் பூவில் இளைப்பாறு கின்ற வண்டே! என்மலர் மார்பின் மீது களைப்பினால் உறங்கு வாரென் காதலர் என்ப தல்லால் பிழைப்பென்ன செய்தார் இந்தப் பெருந்துயர் அடைவ தற்கே?" என்று கதறிய இளந்தளிர்க் கோதை நின்றாள்; விழுந்தாள்; நெருக்கும் வறுமையால் முன்பு புதைத்த முடிச்சுப் புதையலைப் பின்புவந் தாவலாய்ப் பறிப்பவர் போல, முன்றிலில் அமர்ந்து முல்லை தொடுத்துக் கன்றிய அல்லிக் கரங்களால், காதலன் படுத்துக் கிடக்கும் படுக்கையைக் கலைத்தாள். கண்ணா கண்ணா எழுந்துவா என்று பண்ணோ டழுது பாடி எழுப்பினாள். எழாத தூக்கத்தில் இருக்குமவள் கண்ணன் அழாதே என்றா ஆறுதல் கூறுவான்? சதைச்சுவை மேனி அழுகிப் பிளந்த விதைச்சுரை போலப் பற்கள் இளித்தன. கலந்துற வாடிய காந்த விழிகள் பிளந்த முட்டைபோல் உருவம் சிதைந்தன. அடிக்கடி அவள்விழிப் பார்வையை அழகால் தடுத்து நிறுத்தும் தழைத்த அவன் முடி இன்றும் கோதையின் ஏக்கப் பார்வையைக் கொன்று சுருண்ட கனவாய் எழுந்தது. கையால் கரியவக் கனவைக் கோதினாள்; கனவு கலைந்தது; நினைவில் குதித்ததும் கையில் இருந்த கத்தியால் அவன்தலை முருகுசுந்தரம் கவிதைகள் 241.