பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்து பட்டுக் குட்டையில் மறைத்தாள். அகத்தில் துருத்தி அழுகை புறப்பட முகத்தில் சேர்த்து முத்தமழை பொழிந்தாள். உடைந்த புல்லாங்குழல் இடைக்கொடி மாளிகையை ஏந்தும் பவள நடைத்துண் நடுங்க நடந்துவந்தாள்; மாடியிலே அஞ்சி ஒளிந்தாள்; அரும்பிரண்டும் போதாகிக் கொஞ்சும் வசந்தம் குலுங்கும் அவள்மார்பில் கட்டிப் புதைத்துக் களித்த அவன் தலையைத் தொட்டிக்குள் வைத்துப் புதைத்தாள்; கிளிப்பேச்சுப் பண்ணில் குளிப்பாட்டிப் பார்த்த அவன் தலையை மண்ணில் புதைத்து மறைத்தாள்; அத் தொட்டியிலோர் சின்னச் செடிநாட்டாள்; சீராட்டி நாள்தோறும் கன்னத்தில் சேர்த்துக் கருமணிபோல் காத்துவந்தாள். 'ஆவி தளிர்க்க அரும்பும் மலர்ச்செடியே! பாவியெனக் குன்னையன்றிப் பாரில் துணையில்லை. என்னுடம்பும் என்னுயிரும் என்றன் உயிர்த்துடிப்பும் உன்னையன்றிவேறில்லை; உண்மையாய்ச் சொல்லுகிறேன். உன்மூச் சறுந்துவிட்டால் அக்கணமே இக்கோதை தன்மூச் சறுந்துவிடும்; சற்றுமிதில் ஐயமில்லை' என்று புலம்பினாள்; எண்ணா தனவெண்ணி நின்று நடுங்கினாள்; நெற்றிக்கு மேல்திரண்ட மேகக் கருங்கூந்தல் மேலே பரப்பிவைத்துப் பூகம்பப் பேரழுகை பொங்கிவரக் கண்ணிர்த் தாரை மழைபொழிந்தாள்; தன்மார்பில் அச்செடியை ஆரத் தழுவி அணைத்துத் துடித்தழுதாள்; தீச்சுடர் போலத் தளிர்த்துக் குருதியைப்போல் பூச்செடி மேனியெங்கும் பூத்துக் குலுங்கியது. ஆணிவே ரைக்கறையான் அரிக்கக் கொடியொன்று கவிஞர் முருகுசுந்தரம் 242